×
Saravana Stores

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு

 

சீர்காழி, ஏப்.21: சீர்காழி சட்டமன்ற தொகுதியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 288 வாக்குக் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலின்போது வெயில் கடுமையாக சுட்டெரித்ததால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு மந்தமாக நடந்தது. ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்களில் பந்தல்கள் அனைத்தும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது மாலை 4 மணிக்கு மேல் சற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து பார்வையிட்டு தங்களது கட்சியை சேர்ந்தவர்களை சந்தித்து சென்றன.

வாக்குப்பதிவு முடிவில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 71 சதவீதம் வாக்குப்பதிவானது. சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும் 1.25.660 பெண் வாக்காளர்களும் 11 மூன்றாம்
பாலினத்தவர்களும் இருந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 85979 பேரும், பெண் வாக்காளர்கள் 92091 பேரும். 4 திருநங்கைகள் என மொத்தம் 178 074 பேர் வாக்களித்தனர். நடந்து முடிந்த வாக்குப்பதிவில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Sirkazhi Assembly ,Sirkazhi ,Mayiladuthurai parliamentary ,
× RELATED சீர்காழி அருகே அகரப்பெருந்தோட்டம்...